புகையிரத கட்டணங்கள் அதிகரிக்கப்பட மாட்டாது!
Wednesday, July 20th, 2016
புகையிரத கட்டணங்கள் அதிகரிக்கப்பட மாட்டாது என போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. மக்களின் நலன்கருதி, தொடர்ந்தும் குறைவான கட்டணத்தை அறவிடுவதற்கு அரசு தீர்மானித்துள்ளதாக அமைச்சின் செயலாளர் நிஹால் சோமவீர தெரிவித்துள்ளார்.
இறுதியாக 2008 ஆம் ஆண்டிலேயே ரயில் கட்டண திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.பொருட்களை ஏற்றிச் செல்லும் சேவைகள் மற்றும் ரயில்வே திணைக்களத்திற்கு சொந்தமான இடங்களை குத்தகைக்கு விடுவதன் மூலம் இலாபமீட்டுவதற்கு திட்டமிட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும் இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் பஸ் கட்டணங்கள் எதிர்வரும் முதலாம் திகதியிலிருந்து நூற்றுக்கு 6 வீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Related posts:
இலங்கை புகையிரத திணைக்களத்தின் வருமானம் உயர்வு!
இலங்கை உட்பட 54 நாடுகளுக்கு உடனடி கடன் நிவாரணம் அவசியம் - ஐ.நா. அமைப்பு சுட்டிக்காட்டு!
சரியான நேரத்தில் தேர்தலை நடத்த வேண்டும் – அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவிப்பு!
|
|
|


