தென் ஆசியாவின் முதலாவது பசுமை பல்கலைக்கழகத்திற்கு மாணவர்கள் அனுமதி!

Monday, November 21st, 2016

அண்மையில் திறந்து வைக்கப்பட்ட ஹோமாகமயில்அமைந்துள்ள தெற்காசியாவின் முதலாவது பசுமைப் பல்கலைக்கழகத்தில் இன்று(21) முதல் மாணவர்களை அனுமதிப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த பல்கலைக்கழகத்திற்கு 8000 மாணவர்களை அனுமதிப்பதற்கு எதிர்பார்துள்ளதாக திறன் அபிவிருத்தி மற்றும் தொழில் பயிற்சித் துறை அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். ஹோமாகம, பிற்றிபனவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள பசுமைப் பல்கலைக்கழகம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கடந்த மாதம் 26 ஆம் திகதி திறந்து வைக்கப்பட்டது.

மேலும், எதிர்காலத்தில் முப்பதாயிரம் மாணவர்கள் ஒரேநேரத்தில் கல்வி கற்கக் கூடியவகையில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பல்கலைக்கழகம் தெற்காசியாவின் முதலாவது பசுமைப் பல்கலைக்கழகம் ஆகும்.

அதி நவீன வசதிகளைக் கொண்ட இந்த பசுமைப் பல்கலைக்கழகமானது இந்த நாட்டின் கல்வித்துறையில் புதிய மாற்றத்தையும் புதிய பயணத்தின் ஆரம்பத்தையும் குறிக்கின்றது.

ஹோமாகம, பிற்றிபன பிரதேசத்தில் 26 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்த பசுமைப் பல்கலைக்கழகம் பத்து பில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

NSBM1-640x400

Related posts: