புகையிரத கட்டணங்கள் அதிகரிக்காது!
Monday, May 16th, 2016
வற் வரி 15 வீதத்தினால் உயர்த்தப்பட்ட போதிலும் புகையிரத கட்டணங்கள் அதிகரிக்கப்பட மாட்டாது என புகையிரத திணைக்கள பொது முகாமையாளர் ஏ.பீ.ஆரியரட்ன தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்க கருத்து வெளியிடுகையில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் தொடர்ந்தும் கூறுகையில்,
புகையிரத கட்டணங்களில் மாற்றமில்லை. ஏதேனும் காரணங்களுக்காக புகையிரத கட்டணங்கள் உயர்த்தப்பட வேண்டுமாயின் அதற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் பெற்றுக் கொள்ளப்பட வேண்டும்.
இதுவரையில் அவ்வாறு ஒர் தீர்மானம் எடுக்கப்படவில்லை.
புகையிரத பயணங்களுக்காக செலவிடப்படும் பணத்தில் 50 வீதமான பணம் எரிபொருளுக்காக செலவிடப்படுகின்றது. எரிபொருள் விலைகள் குறைவடைந்த காரணத்தினால் செலவுகள் குறைவாகவே காணப்படுகின்றன.
புகையிரத திணைக்களம் தற்போது வருடாந்தம் 6000 மில்லியன் ரூபா வருமானத்தை ஈட்டி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
வடக்கில் தீவிமடையும் பன்றிக்காய்ச்சல்
புலமைப்பரிசில் நிதி உதவிப் பெறும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!
ஆசிரியர்களை அச்சுறுத்தும் நபர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை - பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவிப்ப...
|
|
|


