புகையிரத இருக்கைகளுக்கான முன்பதிவுகள் இன்றுமுதல் நிகழ்நிலை மூலம் மாத்திரமே முன்னெடுக்கப்படும் – ரயில்வே திணைக்களம் அறிவிப்பு!

புகையிரத இருக்கைகளுக்கான முன்பதிவுகள் இன்று முதல் நிகழ்நிலை மூலம் மாத்திரமே முன்னெடுக்கப்படும் என ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.
நிகழ்நிலை மூலம் புகையிரத நிலையங்களின் ஊடாக தமக்கான இருக்கைகளை முன்பதிவு செய்வதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் அந்த திணைக்களத்தின் பிரதி பொதுமுகாமையாளர் எம்.ஜே இந்திபொல தெரிவித்துள்ளார்.
இதன்படி, பயணிகள் பயணிப்பதற்கு 30 நாட்களுக்கு முன்னதாக தமக்கான இருக்கைகளை முன்பதிவு செய்ய முடியும் என்பதுடன், இன்று காலை 7 மணிமுதல் அதற்கான பதிவு நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும் என புகையிரத பிரதி பொதுமுகாமையாளர் எம்.ஜே இந்திபொல தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
பெரியபுலவு மகா வித்தியாலய சம்பவம்: ஆசிரியர்களை பணிநீக்கம் செய்து கடுமையாக தண்டிக்கவேண்டும் என பெற்றோ...
வாஸ் குணவர்தன கைது!
மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளில் 806 பேர் மேன்முறையீடு!
|
|