புகையிரதம் மீது தாக்குதல் மேற்கொண்ட நால்வர் கைது.!

கொள்ளுபிடி புகையிரத நிலையத்திற்கு அருகில் புகையிரதம் ஒன்றின் மீது தாக்குதலை மேற்கொண்ட 4 இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இன்று காலை பாணந்துறையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த புகையிரதம் ஒன்றின் மீதே இவ்வாறு கற்கள் எறிந்து தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.
பம்பலப்பிடி மற்றும் கொள்ளுபிடிய பிரசேதங்களில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டிருந்த இளைஞர்களே குறித்த தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக பொலிஸாரின் விசாரணை மூலம் தெரியவந்துள்ளது. அண்மையில், வடக்கு நோக்கிய சென்ற புகையிரதம் ஒன்றின் மீது மேற்கொள்ளப்பட்ட கல் தாக்குதலில் அநுராதபுரத்தை சேர்ந்த உதவி கல்வி பணிப்பாளர் ஒருவர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்தநிலையில் திட்டமிட்ட அடிப்படையில் இந்த தாக்குதல் நடத்தப்படுவதாக ரயில்வே கட்டுப்பாட்டுத் திணைக்களம் சந்தேகம் வெளியிட்டுள்ளது. இவ்வாறு தொடர்ந்து புகையிரதங்கள் மீது கல் தாக்குதல் நடத்தும் நபர்களை கைது செய்வதற்காக நேற்று முதல் காவலர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.
Related posts:
|
|