புகையிரதத்தின் மீது கல்வீச்சு தாக்குதல்!
Sunday, May 28th, 2017
யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதத்தின் மீது இன்று காலை மேற்கொள்ளப்பட்ட கல்வீச்சு தாக்குதலில் இராணுவ சிப்பாய் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்.
குறித்த புகையிரதத்தின் மீது இனம் தெரியாத இளைஞர்கள் சிலரால் நாவற்குழி பிரதேசத்தில் வைத்து கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் தாக்குதலின் போது மகேஷ் என்ற இராணுவ சிப்பாய் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்.
மேலும் படுகாயமடைந்த இராணுவ சிப்பாய் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த கல்வீச்சு தாக்குதல் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
மழையால் தத்தளிக்கும் மக்கள் விடயத்தில் கூட அக்கறையின்றி இருக்கிறது கூட்டமைப்பு - E.P.D.P யின் .யாழ்...
மிருகக்காட்சி சாலைகள் பூங்காக்களுக்கும் பூட்டு!
கெரவலபிட்டி ஒப்பந்தம் விவகாரம் - ஜனாதிபதியை வற்புறுத்தப்போவதில்லை என்கின்றார் அமைச்சர் வாசுதேவ நாணய...
|
|
|


