பிளாஸ்ரிக் அர்ச்சனை தட்டுகளுக்கு தடை!
Friday, August 5th, 2016
நல்லூர் ஆலய மஹோற்சவத்தில், கடைகளில் பிளாஸ்டிக் அர்ச்சனைத் தட்டுகள் விற்பனை செய்வதற்கு தடை விதித்துள்ளதாக யாழ். மாநகர ஆணையாளர் பொ.வாகீசன் தெரிவித்துள்ளார்.
பிளாஸ்டிக் அர்ச்சனைத் தட்டுக்ளுக்குப் பதிலாக, பனையோலையில் தயாரிக்கப்பட்ட அர்ச்சனைத் தட்டுகளே விற்பனை செய்யப்பட வேண்டும் என்றும் அவற்றை, மாவட்ட மகளிர் அமைப்புக்கள் ஊடாகவும் பனைசார் உற்பத்தியாளர்களிடமிருந்தும், குறைந்த விலைகளில் வியாபாரிகள் பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, மேற்படி திருவிழாக் காலத்தில், 20 மைக்றோனுக்குக் குறைவான பொலித்தீன் பாவனை, உக்காத பொருட்களின் பாவனை என்பவற்றுக்கு முற்றாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது
Related posts:
இந்தியாவிலிருந்து இலங்கைக்கு புதிய ரயில்கள்!
தற்போது அமுலில் உள்ள பயணக்கட்டுப்பாடு எதிர்வரும் 21ஆம் திகதி வரை நீடிப்பு - இராணுவத் தளபதி ஜெனரல் சவ...
மூன்று முன்னாள் தளபதிகளுக்கு உயர்மட்ட இராஜதந்திர பதவி - நாடாளுமன்ற உயர் பதவிகள் குழு அங்கீகாரம்!
|
|
|


