பிளாஸ்டிக் விளக்குமாறு மற்றும் தும்புத்தடி இறக்குமதியை உடனடியாக தடைசெய்ய வேண்டும் – மத்திய சுற்றாடல் அதிகார சபை வலியுறுத்து!

பிளாஸ்டிக் விளக்குமாறு மற்றும் தும்புத்தடி ஆகியவற்றின் இறக்குமதியை உடனடியாக தடைசெய்ய வேண்டுமென மத்திய சுற்றாடல் அதிகார சபை தெரிவித்துள்ளது.
சுற்றுச்சூழல், இயற்கை வளங்கள் மற்றும் நிலையான அபிவிருத்திக்கான குறைக்குழுவின் கலந்துரையாடலின் போதே இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் பரிந்துரைகள் மேற்கொள்ளப்படும் என குறித்த குழுவின் தலைவரான பாராளுமன்ற உறுப்பினர் அஜித் மான்னப்பெரும தெரிவித்துள்ளார்.
அத்துடன், பிளாஸ்டிக் கழிவுகளை குறைக்கும் வகையில் லன்ச் ஷீட் பாவனையை தடை செய்வதற்கு மேற்கொள்ளக்கூடிய நடவடிக்கைகள் குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
இறுதி யுத்தத்தில் கொத்தணி குண்டுகள்?
ஒவ்வொரு வார இறுதியிலும் பொருட்களுக்கான விலைப்பட்டியல் வந்து சேரும்!
அமரர் ஶ்ரீஸ்கந்தராஜா (சிறி ஐயா) அவர்களின் புகழுடல் தீயுடன் சங்கமம்!
|
|