பிலிப்பைன்ஸ் – இலங்கை இடையில் வீசா தள்ளுபடி உடன்படிக்கை!
Saturday, October 8th, 2016
இலங்கைக்கும் பிலிப்பைன்ஸ் நாட்டுக்கும் வீசா தள்ளுபடி உடன்படிக்கை ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது. இதன்படி, இலங்கை மற்றும் பிலிப்பைன்ஸின் இராஜதந்திரிகள் மற்றும் அதிகாரிகள் ஒருவர் மற்றைய நாட்டில் முன்கூட்டியே வீசாவை பெறாமல் சென்று 30 நாட்களுக்கு தங்கியிருக்க முடியும்என தெரிவிக்கப்படுகின்றது.
இரண்டு நாடுகளுக்கும் இடையிலான 55 வருட உறவில் இது முக்கிய உடன்படிக்கையாக கருதப்படுகிறது. பிலிப்பைன்ஸின் வெளியுறவு செயலாளர் பேர்பெக்டோ ஆர் யாசே மற்றும் இலங்கையின் தூதுவர் அருணி ரணராஜா ஆகியோர் இந்த உடன்படிக்கையில் கைச்சாத்திட்டனர்.

Related posts:
காரைநகர் ஊரி கிராம மக்களின் கோரிக்கை!
இந்தியாவின் ஒத்துழைப்பு உயர்மட்டத்திலும் வரவேற்கத்தக்கதாவும் உள்ளது - போக்குவரத்து துறை அமைச்சர் பந்...
2020 ஆம் ஆண்டு அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட வரிச்சலுகை காரணமாக மொத்த வருவாயில் சுமார் 56 சதவீதமான வரு...
|
|
|


