பிரித்தானிய இளவரசி யாழ்ப்பாணத்துக்கு விஜயம் – வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் வரவேற்பு!

இலங்கைக்கு மூன்று நாள் விஜயம் மேற்கொண்டு வருகை தந்துள்ள பிரித்தானிய இளவரசி ஆன் (Her Royal Highness Princess Anne, the Princess Royal) மற்றும் அவரது கணவர் வைஸ் அட்மிரல் சேர் திமோதி லோரன்ஸ் (Vice Admiral Sir Timothy Laurence) உள்ளிட்ட குழுவினர் இன்று (11.01.2024) யாழ்ப்பாணத்தை வந்தடைந்தனர்.
இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான விசேட உலங்கு வானூர்தி மூலம் வருகை தந்த இளவரசி, யாழ்ப்பாணம் நாவாந்துறை பொது மைதானத்தில் தரையிறங்கிய போது, வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களால் வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதன்போது பிரித்தானிய இளவரசி ஆன் மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் ஆகியோருக்கு இடையில் சிநேகபூர்வ கலந்துரையாடல் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
கல்வி நிர்வாக சேவை அதிகாரிகளின் அதிகாரப் போட்டிகளால் கல்வி பாழடைகின்றது - தமிழர் ஆசிரியர் சங்கம் விச...
நாடாளுமன்ற உறுப்பினரானார் பசில் ராஜபக்ஷ - வெளியானது வர்த்தமானி!
பாதிக்கப்படக்கூடியவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த ஆசிய அபிவிருத்தி 203 வங்கியினால் இலங்கைக்கு மில்...
|
|