பிரித்தானியாவிலிருந்து விமானங்கள் இலங்கை வர தற்காலிக தடை – நாளைமுதல் நடைமுறை என விமான சேவைகள் அதிகாரசபை அறிவிப்பு!

Tuesday, December 22nd, 2020

பிரித்தானியாவில் புதுவகை கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் நிலைமை ஏற்பட்டுள்ளதால் அங்கிருந்து இலங்கைக்கு விமானங்கள் வருவதற்கு தற்காலிக தடைவிதிப்பதற்கு சிவில் விமான சேவைகள் அதிகாரசபை தீர்மானித்துள்ளது.

இதன்படி நாளை அதிகாலை 2 மணிக்கு பின்னர் பிரித்தானியாவில் இருந்து வரும் சகல விமானங்களுக்கும் இலங்கையில் தரையிறக்க அனுமதியளிக்கப்படாது என்று சிவில் விமான சேவைகள் அதிகாரசபை தெரிவித்துள்ளது.

பிரித்தானியாவில் தற்போது புதிய வகை கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்துள்ளது. இதனால் 30 க்கும் மேற்பட்ட நாடுகள் அங்கிருந்து வரும் விமானங்களுக்கு தடை விதிக்க தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: