பிரான்ஸ் கடற்படை கப்பல் இலங்கைக்கு வருகை!

Tuesday, August 16th, 2016

பிரான்ஸ் கடற்படை கப்பலான ரெவி நல்லெண்ண பயணமாக  திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்துள்ளது

கடற்படையின் பாரம்பரியங்களுடன் குறித்த கப்பலுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.

இதனையடுத்து கிழக்கு மாகாண கடற்படை தளபதி ரியர் அட்மிரல் ட்ராவிஸ் சின்னய்யாவிற்கும் பிரான்ஸ் கடற்படை கப்பலின் கட்டளையிடும் அதிகாரிக்கும் இடையில் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

கிழக்கு மாகாண கடற்படை கட்டளைக்கான தலைமையத்தில் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில் மாகாண பிரதி கட்டளை தளபதி மெரில் சுதர்சன உள்ளிட்ட ஏனைய அதிகாரிகளும் பங்குபற்றியிருந்தனர். இந்த உத்தியோகபூர்வ சந்திப்பில் நினைவுபரிசுகளும் பரிமாற்றிக்கொள்ளப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.

எதிர்வரும் 18 ஆம் திகதி வரை சஞ்சரிக்கும் பிரான்ஸ் கப்பல், கடற்படை ஏற்பாடு செய்துள்ள திட்டங்கள் சிலவற்றிலும் பங்கேற்கவுள்ளது.

அண்மையில் அமெரிக்காவின் யூ.எஸ்.எஸ் நியூ ஒர்லியன்ஸ் கடற்படை கப்பல் இலங்கை வருகை மேற்கொண்டிருந்த நிலையில், பிரான்ஸ் நாட்டின் கடற்படை கப்பலும் வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

இரட்டைக் குடியுரிமை விவகாரத்தை அரசாங்கம் மீள்பரிசீலனை செய்ய வேண்டும் - அரசை எச்சரிக்கும் ஞானசார தேரர...
எக்ஸ்ப்ரஸ் பேர்ல் கப்பலின் உரிமை நிறுவனத்திடம் முன் தொகையாக 40 மில்லியன் டொலர் நஷ்ட ஈடு கோரிய இலங்கை...
பெப்ரவரி 1 முதல்முதல் புதிய சொகுசு போக்குவரத்து சேவை - தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் ந...