பிரபல ஊடகவியலாளர் சிவா சுப்ரமணியம் காலமானார்!

பிரபல ஊடகவியலாளரான சிவா சுப்ரமணியம் நேற்றிரவு(29) யாழ்ப்பாணத்தில் தனது 74ஆவது வயதில் காலமானார்.
இடதுசாரி கொள்கையில் தீவிர பற்றுக்கொண்டிருந்த அமரர் சுப்ரமணியம், நாடகஎழுத்தாளருமாவார். ஓய்வுபெற்றஅரசஉத்தியோகத்தாரான இவர் இலங்கையின் பல்வேறு தேசிய பத்திரிகைகளில் அரசியல் தொடர்பான ஆய்வுக்கட்டுரைகளை எழுதி வந்துள்ளார்.
தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் பாண்டித்தியம் பெற்றிருந்த இவர், சக ஊடகவியலாளர்களுக்கு ஒருபல்கலைக்கழகமாகத் திகழ்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாணம், கோண்டாவில் மேற்கிலுள்ள அன்னாரது இல்லத்தில் பூதவுடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. நாளை மறுதினம் புதன்கிழமை அன்னாரது இறுதிக் கிரியைகள் நடைபெறுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
ஜனாதிபதி போட்டியாளர்கள் சொத்துக்களை பகிரங்கப்படுத்த வேண்டும் - இலங்கை டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் வல...
இந்தியாவின் 75 ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் யாழ்ப்பாணத்தில்!
மூன்று முன்னாள் தளபதிகளுக்கு உயர்மட்ட இராஜதந்திர பதவி - நாடாளுமன்ற உயர் பதவிகள் குழு அங்கீகாரம்!
|
|