பிரதேசங்களின் வெற்றியாளர்களாக மட்டுமல்லாது சர்வதேச சாதனையாளர்களாகவும் = மிளிரவேண்டும் – ஈபிடிபியின் யாழ் மாவட்ட நிர்வாக செயலாளர் பாலகிருஸ்னன் தெரிவிப்பு!

Monday, March 18th, 2024

எமது இளைஞர்களும் யுவதிகளும் விளையாட்டுதுறையூடாக பிரதேசங்களின் வெற்றியாளர்களாக மட்டுமல்லாது சர்வதேச அளவில் சாதனையாளர்களாகவும் பரிணாமம் பெற்று  மிளிரவேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாவட்ட நிர்வாக செயலாளர் சிவகுரு பாலகிருஸ்னன் தெரிவித்துள்ளார்.

அராலி இந்துக் கல்லூரி விளையாட்டு நிகழ்வில் அதிதியாக கலந்து சிறப்பித்து உரையாற்றிய கட்சியின் யாழ் மாவட்ட நிர்வாக செயலாளர் சிவகுரு பாலகிருஸ்னண் மேலும் தெரிவிக்கையில் –

விளையாட்டுக்கள் மனிதனை நிலைப்படுத்தவதுடன் அவனது உடல் உள மறுசீரமைப்புக்கும் குறிப்பாக வலிமைப்படுத்தவதற்கும் மிகுந்த உந்துதலாக அமைகின்றது.

அதனால் தான் இன்று அரசாங்கம் கல்வியுடன் விளையாட்டு துறைக்கும் அதிக முக்கியத்தவத்தை கொடுக்த்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகின்றது.

இதேநேரம் கிடைக்கின்ற சந்தர்ப்பங்களை நீங்கள் சரியானதாக பயன்படுத்தி அந்த துறைகளில் வெற்றியாளர்களாக மட்டுமல்லாது சாதனையாளர்களாகவும் பரிணமிக்க வேண்டும்.

அவ்வாறு நீங்கள் விளையாட்டு துறையில் சிறப்பாக பிரகாசிக்கும்போது அது தொழில் துறையானதாக மாற்றம்பெற்று உங்களது பொருளாதார மீட்டலுக்கான ஒரு களத்தையும் வழங்குகின்றது. அத்துடன்  துறைசார் பயிற்சி நிபுணத்துவம் என்பது எமது பிரதேசங்களில் குறைவான வளங்களுடனேயெ இருக்கின்றது. அவற்றை நிவர்த்தி செய்து கொள்வதும் அவசியமாகும்.

இதேநேரம் எமது பிரதேசங்களின் விளையாட்டுத்துறைசார் தேவைகளை முடியுமானவரையில் நிவர்த்திசெய்துகொடுக்க அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பல்வேறு முயற்சிகளை அரசாங்கத்துடன் இணைந்து முன்னெடுத்து வருகின்றார்.

இதனிடையே இன்று விளையாட்டு வீரர்கவே அதிகளவு பொருளாதாரமீட்டுபவர்களாக இருக்கின்றனர். அந்தவகையில் நீங்களும் உங்கள் வாழ்வில் மாற்றங்களை உருவாக்க உங்களை நாடிவரும் சந்தர்ப்பங்களை சரியானதாக பயன்படுத்தி வாழ்க்கையை வெற்றிகொள்ள வேண்டும் என வாழ்த்துகின்றேன் எனவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: