பிரதமர் தலைமையிலான 13 நிறுவனங்கள் நீக்கம்!

Friday, March 30th, 2018

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமைத்துவத்தின் கீழ் உள்ள தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சுக்கு உரித்தான 13 நிறுவனங்கள் அதிலிருந்து நீக்கப்பட்டுள்ளன.

இந்த மறுசீரமைப்பு பணிகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் வெளியிட்ட விசேட வர்த்தமானி அறிவித்தல் ஊடாக மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதனடிப்படையில், பிரதமர் தலைமையிலான தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சின் கீழிருந்த இலங்கை மத்திய வங்கி பிணையங்கள், செலாவணி ஆணைக்குழு என்பன நிதியமைச்சுக்கு மாற்றப்பட்டுள்ளது.

அத்துடன், கடன் தொடர்பான தகவல் அலுவலகம், தேசிய சம்பள நிர்ணய சபை, தேசிய காப்புறுதி நிதியம், பொது முரண்பாடுகள் மற்றும் பயங்காவாதம் தொடர்பான நிதியம், மனித உரிமைகள் அபிவிருத்தி தொடர்பான இலங்கையின் தேசிய சபை, தேசிய இளைஞர் சேவைகள் சபை உள்ளிட்ட 13 நிறுவனங்கள் மாறப்பட்டுள்ளன.

இந்நிலையில் காணி அமைச்சின் கீழ் இருந்த கந்தளாய் சீனி தொழிற்சாலை அமைச்சர் தயா கமகே தலைமையிலான ஆரம்ப கைத்தொழில் அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.

Related posts: