பிரஜைகளின் உரிமைக்கு, இடையூறு ஏற்படாது – றம்புக்கனை சம்பவம் குறித்து அரச தலைவர்கள் கவலை!
 Wednesday, April 20th, 2022
        
                    Wednesday, April 20th, 2022
            
அமைதியான முறையில் போராட்டம் நடத்தும் இலங்கை பிரஜைகளின் உரிமைக்கு, இடையூறு ஏற்படாது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ட்விட்டர் பதிவொன்றின் ஊடாக அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
ரம்புக்கனையில் நேற்றையதினம் நடந்த சம்பவம் தொடர்பில் பக்கசார்பற்ற மற்றும் வெளிப்படையான விசாரணைகளை காவல்துறை மேற்கொள்ளும் எனவும் குறித்த துயரச் சம்பவம் தொடர்பில் தான் கவலையடைவதாகவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.
அத்துடன், எதிர்ப்பு தெரிவிக்கும் அனைத்து பொதுமக்களும் வன்முறையை தவிர்க்குமாறு ஜனாதிபதி தனது ட்விட்டர் பதிவில் மேலும் கோரியுள்ளார்.
இதனிடையே
ரம்புக்கனையில் நேற்று இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கவலை வெளியிட்டுள்ளார்.
ட்விட்டரில் கருத்தொன்றை வெளியிட்டுள்ள பிரதமர், குறித்த சம்பவத்தினால், தாம் மிகுந்த வருத்தம் அடைந்துள்ளதாகவும், இது தொடர்பில் விசேட விசாரணை நடத்தப்பட வேண்டுமென இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
|  | 
 | 
 
            
        


 
         
         
         
        