பிணைமுறி மோசடி: நாட்டில் தனிநபர் கடன் தொகை உயர்வு!

மத்திய வங்கயின் பிணைமுறி விற்பனையில் ஏற்பட்ட மோசடிகளால் இலங்கையின் தனிநபர் கடன் தொகை 20 ஆயிரம் ரூபாவினால் அதிகரித்துள்ளதாக கீர்த்தி தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.
நேற்று கொழும்பில் நடைபெற்ற பொதுமக்கள் பொதுமக்கள் அறிவு மேடை எனும் கலந்துரையாடலின் போது கபே அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கீர்த்தி தென்னக்கோன் இந்தத் தகவல்களை வெளியிட்டுள்ளார்..
தொடர்ந்தும் அவர், கருத்து வெளியிட்டுகையில் – பிணைமுறி மோசடி தொடர்பான கோப் குழு அறிக்கைக்கு எதிராக பொங்கும் நபர்கள் ஊழல், மோசடி ஆதரவாளர்களேயாகும். இலங்கையின் வரலாற்றில் கணக்காய்வாளர் நாயகம் ஒருவர் மிரட்டப்பட்ட சம்பவமும் அவ்வாறானவர்கள் மூலமாகவே நடைபெற்றுள்ளது.
உண்மையில் மத்திய வங்கியின் பிணைமுறி விற்பனையில் நடைபெற்ற மோசடிகள் காரணமாக இலங்கைப் பிரஜைகள் ஒவ்வொருவர்மீதும் தலா இருபது ஆயிரம் ரூபா மேலதிக கடன் சுமை சுமத்தப்பட்டுள்ளது என்றும் கீர்த்தி தென்னக்கோன் மேலும் தெரிவித்துள்ளார்.
Related posts:
|
|