பால் உற்பத்தி குறைவதைத் தடுக்க விவசாயிகளுக்கு உரிய விலை வழங்க வேண்டும் – இராஜாங்க அமைச்சர் பி. ஹேரத் தெரிவிப்பு!

உள்ளூர் பால் மாவின் 400 கிராம் பக்கற்றின் விலை சுமார் 20 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளது என பண்ணை ஊக்குவிப்பு, பால் மற்றும் முட்டை தொழில் துறைக்கான இராஜாங்க அமைச்சர் பி. ஹேரத் தெரிவித்துள்ளார்.
நுகேகொடையில் தனியார் பால் மா உற்பத்தியாள ருக்குச் சொந்தமான விற்பனை நிலையமொன்றை நேரில் பார்வையிட்டதன் பின்னர் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
நாட்டில் பால் மாவின் தேவை அதிகமாக இருப்பதால், பால் மாவை வாங்க மக்கள் வரிசையில் நிற்க வேண்டியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், நாட்டில் பால் உற்பத்தி குறைவதைத் தடுக்க விவசாயிகளுக்கு உரிய விலை வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது..
Related posts:
வைரஸ் தொற்றுக்கு சிகிச்சையளிக்க அனைத்து வசதிகளையும் வழங்கவும் - சுகாதார அமைச்சர்!
மானிப்பாய், காரைநகர், குறிகட்டுவான் வீதிகளின் புனரமைப்பு விரைவில்!
நடமாடும் வாகனங்களின் ஊடாக மரக்கறிகளை விற்பனை செய்வதற்கு விசேட வேலைத்திட்டம்!
|
|