பால் உற்பத்திக் குறைவால் மக்களின் புரதச்சத்து குறைபாடு அதிகமாக உள்ளது – அகில இலங்கை கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் தெரிவிப்பு!

Saturday, August 6th, 2022

பால் உற்பத்தி நாற்பது வீதமாக குறைந்துள்ளதாக அகில இலங்கை கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர சுட்டிக்காட்டியுள்ளார்.

கால்நடை தீவனம், மருந்துகள் மற்றும் தடுப்பூசிகள் பற்றாக்குறை, இறக்குமதி தடை காரணமாக உள்ளூர் பால் உற்பத்தி குறைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதனால் புரதச்சத்துக் குறைபாட்டால் மக்கள் அவதியுறுவதாகவும், புரதத் தேவையைப் பூர்த்தி செய்ய ஒரு குழந்தைக்கு தினமும் 150 மில்லி பால் கொடுக்க வேண்டியிருந்தாலும், அந்தளவு கொடுக்க முடியாது என்றும் அவர் வலியுறுத்துகிறார்.

எரிபொருள் பற்றாக்குறையால் கால்நடைத் தொழிலுக்குத் தேவையான தீவனம் மற்றும் இதர பொருட்கள் மற்றும் திரவப் பால் கொண்டு செல்வதில் இடையூறு ஏற்பட்டுள்ளதால் சிறு மற்றும் நடுத்தர விவசாயிகள் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளனர் என்று அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது..

000

Related posts:


நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஆசனங்களை ஒதுக்கும் நடவடிக்கைகள் ஆரம்பம் - நாடாளுமன்ற பிரதி பொதுச் செயல...
இறக்குமதி செய்யப்படும் 623 பொருட்களுக்கு நூறுவீத உத்தரவாத தொகையை செலுத்த வேண்டும் - மத்திய வங்கி அத...
அஸ்வெசும நலன்புரித் திட்டம் - சில குறைப்பாடுகள் காணப்படுவதினை ஏற்றுக்கொள்கின்றோம் என நிதி இராஜாங்க ...