பால்மா தொடர்பில் கட்டுப்பாட்டு விலைக்கு பதிலாக விலை சூத்திரம்!
Thursday, June 7th, 2018
பால்மா தொடர்பில் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டு விலைக்கு பதிலாக விலை சூத்திரம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என பால் உற்பத்தித்துறையின் சார்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் வரி மற்றும் பாலுற்பத்திக்கான செலவீனம் குறித்த பிரச்சினைக்கு நிலையான தீர்வொன்றை பெற முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டின் வருடாந்த பால் உற்பத்தியானது, 196 மில்லியன் லீற்றரில் இருந்து 327 மில்லியன் வரை அதிகரித்துள்ளது. எனினும், இதன் மூலம் இலங்கையின் பால் நுகர்வின் 40 சதவீதத்தை மாத்திரமே பூர்த்திசெய்ய முடிந்துள்ளது.
இந்த நிலையில், நாட்டின் பால் உற்பத்தித் துறையில் பண வீக்கம் மற்றும் பால் உற்பத்தியில் எதிர்நோக்கும் செலவுகளாலும் பாரிய அளவில் சவால்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
சீருடைகளில் மாற்றம் - அமைச்சர் ராஜித சேனாரட்ன!
இலங்கையின் சுதந்திரதினத்தையிட்ட இந்திய பிரதமரின் வாழ்த்துச் செய்தி!
தோட்ட தொழிலாளர்களுக்கு 1000 ரூபாய் சம்பளம் வழங்குமாறு பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு அறிவித்துள்ளேன் – ...
|
|
|


