பாலுக்காக வழங்கப்படும் கட்டணம் 200 ரூபா வரை அதிகரிக்கப்பட வேண்டும் – பால் உற்பத்தியாளர்கள் கோரிக்கை!

ஒரு லீற்றர் பாலுக்காக வழங்கப்படும் கட்டணம் 200 ரூபா வரை அதிகரிக்கப்பட வேண்டும் என சிறிய பால் உற்பத்தியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
தற்போது திருத்தப்பட்டுள்ள வரிகள் காரணமாக புண்ணாக்கு உள்ளிட்ட தீவனங்களின் விலைகள் அதிகரித்தமை, புற்கள் வெட்டும் இயந்திரங்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டமை மற்றும் மின்சார கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டமை போன்ற காரணங்களால் ஒரு லீற்றர் பாலுக்காக செலுத்தப்படும் 110 ரூபா போதுமானதாக இல்லை என வலியுறுத்துகின்றனர்.
இதன் காரணமாக பால் உற்பத்தி குறிப்பிடத்தக்க அளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் சிறிய பால்மா உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
பால் உற்பத்தியாளர்களுக்கு தேவையான தொழிநுட்ப உதவிகளை வழங்காமை, அரசாங்கத்தின் ஊடாக வழங்கப்பட வேண்டிய நிவாரணை உரிய வகையில் வழங்காமை உள்ளிட்ட காரணிகளால் தங்களது தொழிற்றுறை வீழ்ச்சியடையும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் சிறிய பால் உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|