பாரிய வெடிகுண்டு தெல்லிப்பழையில் மீட்பு!

தெல்லிப்பழை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்லோடைப் பிள்ளையார் கோயில் வடக்கு வீதியில் புதைத்து வைக்கப்பட்டிருந்த இந்தியத் தயாரிப்பான பாரிய வெடிகுண்டு நேற்றுச் செவ்வாய்க்கிழமை(21) தெல்லிப்பழைப் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
சுமார்-25 முதல் 30 கிலோவிற்கும் இடைப்பட்ட எடையுடைய இந்தக் குண்டு கடந்த 30 வருடங்களுக்கு முன்னர் புதைக்கப்பட்டிருக்கலாம் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த குண்டு இருந்த இடத்தைக் குழந்தையொன்று தோண்டியதையடுத்து மேற்படி குண்டு வெளிப்பட்டுள்ளது. வெடிக்க வைப்பதற்கான தகடு குறித்த குண்டில் பொருத்தப்படாமையினால் நீண்ட காலம் குறித்த குண்டு வெடிக்காத நிலையிலிருந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்
Related posts:
நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் சீரான வானிலை - வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிப்பு!
மார்பக புற்றுநோயால் வருடாந்தம் இலங்கையில் 700 - 800 பேர் உயிரிழப்பு - வைத்திய நிபுணர் அதிர்ச்சித் தக...
மின் கட்டணத்தில் நிவாரணம் வழங்குவதற்கு தீர்மானம் - எரிசக்தி மின் சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவ...
|
|