பாரம்பரிய முறைப்படி முழுமையாக விவசாயத்தில் ஈடுபடுங்கள் – விவசாயிகளுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவிப்பு!

Sunday, January 17th, 2021

எந்தவொரு இடையூறும் இன்றி பிரச்சினைகள் தீர்க்கப்படும் வரையில் முழுமையாக விவசாயத்தில் ஈடுப்பட அனுமதி வழங்கப்படும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கிராமத்தினருடம் ஒரு பேச்சுவார்த்தை வேலைத்திட்டத்தின் 06வது நிகழ்வின் போதே ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் ஜனாதிபதி மேலும் குறிப்பிடுகையில் – பிரச்சினைகள் தீர்க்கப்படும் வரை எந்தவித இடையூறும் இல்லாமல் தொடர்ந்து பயிர்ச்செய்கையில் ஈடுபட அனைத்து விவசாயிகளுக்கும் முழுமையான அனுமதி வழங்கப்படுகினடறது

6 ஆவது “கிராமத்துடன் உரையாடல்“ நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விவசாயிகள் முன்வைத்த பிரச்சினைகள் குறித்து கவனம் செலுத்திய ஜனாதிபதி இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் பாரம்பரிய பயிர்ச்செய்கை நடவடிக்கைகளுக்கு தடை ஏற்படுத்த வேண்டாம் என்று வனவிலங்கு, வன பாதுகாப்பு, சுற்றாடல் மற்றும் பொலிஸ் உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களின் அதிகாரிகளுக்கும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.. இருப்பினும், புதிதாக காட்டை அகற்றி பயிரிட எவ்வித அனுமதியும் இல்லை என்பதையும் ஜனாதிபதி இதன்போது வலியுறுத்தியுள்ளமை குறிழப்பிடத்தக்கது..

Related posts: