பாதுகாப்பு படைகளின் பிரதானியாக இருந்த ஜெனரல் சவேந்திர சில்வாவின் பதவிக்காலம் மேலும் நீடிப்பு!

Saturday, June 8th, 2024

பாதுகாப்பு படைகளின் பிரதானியாக இருந்த ஜெனரல் சவேந்திர சில்வாவின் பதவிக்காலம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஒப்புதலின் பேரில், 06 மாத காலத்திற்கு பாதுகாப்புப் படைகளின் பிரதானியாக ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளதுடன், இதற்கான வர்த்தமானி அறிவித்தல் நேற்றையதினம்(07) இரவு வெளியிடப்பட்டது.

இந்நிலையில் ஜெனரல் சவேந்திர சில்வா பாதுகாப்புப் படைகளின் பிரதானியாக ஜூன்1 ஆம் திகதி முதல் டிசம்பர் 31 ஆம் திகதி வரை அமுலுக்கு வரும் வகையில் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: