பாதுகாப்பு தொடர்பில் இலங்கை உஷார்!
Tuesday, October 4th, 2016
இந்தியா மற்றும் பாகிஸ்தான் எல்லை பகுதியில் இடம்பெறுகின்ற பயங்கரவாத மோதல்கள் தொடர்பில் இலங்கைக்கு அச்சுறுத்தல் ஏற்படாதவாறு தேசிய பாதுகாப்பை உறுதிப் படுத்தியுள்ளதாக பாதுகாப்பு ஒத்துழைப்புககளை கோரும் பட்சத்தில் அது குறித்து சிந்திக்க முடியும் எனவும் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இலங்கை ஊடான பயங்கரவாத ஊடுருவல்கள் குறித்து இந்தியா ஏற்னவே எச்சரித்திருந்த நிலையில் , காஷ்மீர் எல்லை பகுதியில் மோதல்கள் உக்கிரமடைந்துள்ளன. அந்தவகையில் இலங்கையின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி தெரிவிக்கையில் –
ஏனைய நாடுகளில் காணப்படும் மோதல்கள் குறித்து எமக்கு தீரமானிக்க முடியாது. எமது நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. ஓத்துழைப்புகள் தேவைப்படும் பட்சத்தில் அது குறித்து அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் தெரிவித்தார்.
எவ்வாறாயினும் இலங்கையின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் அற்ற வகையில் படைகள் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன எனவும் அவர் குறிப்பிட்டார்.

Related posts:
|
|
|


