பாதுகாப்பு செயலர் – பாகிஸ்தான் தூதரக பாதுகாப்பு ஆலோசகர்சந்திப்பு!

பாகிஸ்தானின் இலங்கைக்கான தூதராகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கேணல் சஜ்ஜாத் அலி பாதுகாப்பு செயலாளர் கபில வைத்தியரத்னவை சந்தித்தார்.
பாதுகாப்பு அமைச்சில் நேற்றைய இந்த சந்திப்பின் போது பாகிஸ்தான் தூதரக பாதுகாப்பு ஆலோசகர் மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஆகியோருக்கிடையே இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் தொடர்பான கலந்துரையாடல் இடம்பெற்றது.இந்த சந்திப்பினை நினைவு கூறும் வகையில் நினைவுச் சின்னங்களும் பரிமாறிக்கொள்ளப்பட்டன.இந்த நிகழ்வில் பாதுகாப்பு அமைச்சின் இராணுவ இணைப்பு அதிகாரி மேஜர் ஜெனரல் டீஏஆர் ரணவக்கவும் கலந்து கொண்டார்.
Related posts:
26 இலங்கைப் பணிப்பெண்கள் மீண்டும் நாட்டுக்கு திரும்பல்!
ஆபத்தை விளைவிக்கக்கூடிய செத்தல் மிளகாய்: மக்களுக்கு அவசர எச்சரிக்கை!
புதிய காற்றாலை மின்னுற்பத்தி நிலையங்களை அமைக்கக்கூடிய இடங்களை அடையாளப்படுத்துங்கள் – துறைசார் தரப்பி...
|
|