பாதுகாப்புச் செயலாளராக முன்னாள் மேலதிக சொலிஸிட்டர் ஜெனரல் ஜெனரல் கபில வைத்தியரத்ன!

அமைச்சுக்களுக்கான செயலாளர் பதவிகளில் பொறுப்பு மிக்கதும் அதிகாரம் கூடியதுமான பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக முன்னாள் சிரேஷ்ட மேலதிக சொலிஸிட்டர் ஜெனரல் கபில வைத்தியரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் இன்று காலை பாதுகாப்புச் செயலாளராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.பாதுகாப்புச் செயலாளராக கடமையாற்றிய கருணாசேன ஹெட்டியராச்சி பதவி விலகியுள்ள நிலையில் அவரது இடத்திற்கு கபில வைத்தியரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.
சட்டத்துறையில் பாண்டித்தியம் பெற்ற கபில வைத்தியரத்ன கடந்த 2014ஆம் ஆண்டு ஜனாதிபதி சட்டத்தரணியாக பணியாற்றியிருந்தார். அத்தோடு பிஜி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் நீதிபதியாக கடமையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
பயணிகள் இலகுரக விமானம் விபத்து - மூவர் காயம்!
நீதிமன்றத்தின் தடை உத்தரவை நீக்கி ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்ப விரைவில் நடவடிக்கை - கல்வி அமைச்சர் அ...
நிரந்தர அரசியல் தீர்வை நோக்கி தமிழர் தரப்பு நகராவிட்டால் பெருந்தேசியவாதம் குறுந்தேசிய வாதமும் தமது இ...
|
|