குறைந்த வருமானம் பெறும் 2.8 மில்லியன் குடும்பங்களுக்கு அரிசி வழங்க அரசாங்கம் தீர்மானம் – நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவிப்பு!

Tuesday, March 26th, 2024

குறைந்த வருமானம் பெறும் 2.8 மில்லியன் குடும்பங்களுக்கு அரிசி வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

அதன்படி, ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் 20 கிலோகிராம் அரிசி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

ஏப்ரல் மாதத்தில் சிங்கள, தமிழ் புத்தாண்டுக்கு முன்னதாக 10 கிலோகிராம் அரிசியும், எஞ்சிய 10 கிலோகிராம் அரிசி மே முதல் வாரத்திற்குள் வழங்கப்படும்.

இந்த நிவாரணத் திட்டத்தின் மூலம் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு மட்டுமின்றி, நெல் விவசாயிகள் மற்றும் சிறு மற்றும் நடுத்தர அரிசி ஆலை உரிமையாளர்களுக்கும் பயனை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: