பாதுகாப்பிற்கு சவாலாக விளங்கும் புர்கா ஆடையை விரைவில் தடை – நாடாளுமன்றில் பாதுகாப்பு அமைச்சர் அறிவிப்பு!

Wednesday, March 10th, 2021

இலங்கையில் தேசிய பாதுகாப்பிற்கு சவாலாக விளங்கும் புர்கா ஆடையை விரைவில் தடைசெய்யப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் அட்மிரல் சரத் வீரசேகர  இவ்விடயத்தை தெரிவித்துள்ளார்.

மேலும் கடந்த 2015ஆம் ஆண்டு ஜனவரியில் சுமார் 37 இலங்கையர்கள், சிரியா சென்று ஐ.எஸ் அமைப்புடன் இணைந்திருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் ஈஸ்டர் தாக்குதல்களுக்கு உதவிய குற்றத்தில் 54 பேர் வெளிநாடுகளில் கைதாகி அவர்களில் 50 பேர் இலங்கைக்கு அழைத்துவரப்பட்டிருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: