ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதிமுதல் சுற்றுலாப் பயணிகளுக்காக நாடு திறக்கப்படும் – சுற்றுலாத்துறை அமைச்சு அறிவிப்பு!

Tuesday, July 20th, 2021

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்காக எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதிமுதல் நாட்டினைத் திறக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக என சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

நாடு முழுமையாக திறக்கப்பட்டதும் நாளொன்றுக்கு 500 முதல் 1,000 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருவார்கள் என சுற்றுலாத்துறை அமைச்சு எதிர்பார்த்துள்ளது.

இதேவேளை கொரோனா தொற்று பரவல் காரணமாக மூடப்பட்டிருந்த நாட்டின் எல்லைகள் மீண்டும் திறக்கப்பட்டதிலிருந்து, 18 ஆயிரத்து 200 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

இதன் காரணமாக நாட்டிற்கு ஏறத்தாள 40 மில்லியன் டொலர் வருமானத்தை ஈட்ட வழிவகுத்தது எனவும் அமைச்சினால் வெளியிடப்பட்ட புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை சுற்றுலாத்துறை அபிவிருத்தி குறித்து நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவுடன் கலந்துரையாடல்கள் நடைபெற்று வருவதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

மேலும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட சுற்றுலாத் துறையில் பணியாற்றுவோரின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான ஒரே வழி, நாட்டைத் திறந்து சுற்றுலாத் துறையை மீட்டெடுப்பதே என்றும் அவர் கூறியுள்ளார்.

எனவே இலங்கையின் மீது பயணத் தடைகளை விதித்துள்ள அந்த நாடுகளின் தொடர்புடைய அதிகாரிகளுடன் கலந்துரையாட சுற்றுலாத்துறை அமைச்சு நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்றும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: