பாதீட்டின் இரண்டாவது வாசிப்பு நிறைவேறியது!
Friday, November 18th, 2016
அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு 107 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இரண்டாம் வாசிப்பின் மீதான விவாதத்தின் இறுதிநாளான இன்று (18) குறித்த வாக்கெடுப்பு இடம்பெற்றிருந்தது.
குறித்த வாக்கெடுப்பில், ஜே.வி.பி மற்றும் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் 55 உறுப்பினர்கள் தங்களது வாக்கை எதிராக வழங்கியிருந்தனர். இதேவேளை, வாக்கெடுப்பு இடம்பெற்ற வேளையில் 07 பேர் சமூகமளித்திருக்கவில்லை என்பது குறிப்பிடத்கத்கது. அந்த வகையில் 107 மேலதிக வாக்குகளால் இரண்டாம் வாசிப்பு நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஆதரவு – 162 (ஐ.தே.க., ஶ்ரீ.ல.சு.க., இ.தொ.கா., ஈ.பி.டி.பி)
எதிர் – 55 (ஜே.வி.பி, ஒன்றிணைந்த எதிர்க்கட்சி)
சமூகமளிக்காதோர் – 07

Related posts:
பௌத்த மதத்திற்கு முக்கியத்துவம் இல்லாமற் போகும்.
குடிநீருக்கு உலைவைத்து தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கு உள்ளுராட்சி தேர்தலில் மக்கள் தகுந்த பாடம் பு...
வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்காக பண்டாரநாயக்க விமான நிலையத்தில் பிசிஆர் மையம் - அமைச்சர் பிரசன்ன ர...
|
|
|


