பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாக்கும் வகையிலேயே வரித்திருத்தம் அமைய வேண்டும் – சர்வதேச நாணய நிதியம் வலியுறுத்து!
Friday, March 3rd, 2023
ஏழை மற்றும் பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாக்கும் வகையிலேயே வரித்திருத்தம் அமையப்பெற வேண்டும் என சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக் கிளையின் சிரேஷ்ட பிரதானி Peter Breuer, சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கை கிளையின் தலைமை அதிகாரி Masahiro Nozaki ஆகியோர் ஒன்றிணைந்த அறிக்கையொன்றை விடுத்துள்ளனர்.
சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான கிளை இது தொடர்பில் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது –
அரசாங்கத்தின் செலவுகளை ஈடு செய்வதற்கு புதிய வருமான வரி உதவி செய்யும் என குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச நியமங்களுக்கு அமையவே புதிய வருமான வரி அமைந்துள்ளதாக, சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக் கிளை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய வரி சீர்திருத்தம் தற்போதுள்ள நிலைமையை சீர் செய்ய உதவும் எனவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
|
|
|


