பாதிக்கப்பட்ட மக்களுக்கு எதிர்வரும் 14 திகதி நஷ்டஈடு!

Sunday, June 12th, 2016

சாலாவ பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நஷ்டஈட்டுத்தொகையை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (14) வழங்கத் தீர்மானித்துள்ளதாக கொழும்பு மாவட்டச் செயலாளர் சுனில் கன்னங்கர தெரிவித்துள்ளார்.

சேதமடைந்த வீடுகள் தொடர்பான மதிப்பீடு நாளைய தினம் நிறைவுக்கு வரவுள்ள நிலையில் குறித்த மதிப்பீடுகளின் அடிப்டையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நஷ்டஈடு வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

குறித்த பகுதியில் தற்போதுள்ள மதிப்பீட்டின்படி முழுமையாக சேதமடைந்த வீடுகள் மற்றும் கட்டிடங்கள் எண்ணிக்கை  654 ஆக காணப்படுவதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை மதீப்பீடுகள் நிறைவடைந்ததன் பிறகு சீதாவாக்கை பிரதேச சபைக்குட்பட்ட வீட்டு உரிமையாளர்களுடன் கலந்துரையாடி சேதமடைந்த வீடுகளுக்கு ரூபா 50,000 வீதம் மூன்று மாதங்களுக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென அவர் தெரிவித்தார்

Related posts:

சிறார்கள் கல்வியுடன் விளையாட்டுத்துறையிலும் சாதிப்பவர்களாகத் திகழவேண்டும் – ஈ.பி.டி.பியின் நல்லூர் ப...
நாடு எதிர்கொண்டுள்ள நெருக்கடிக்கு தனியொரு நபர் மீது குற்றச்சாட்டுகளை சுமத்த முடியாது - ஞானசார தேரர்...
தொடரும் மோசமான காலநிலை - 20 மாவட்டங்களைச் சேர்ந்த 80 ஆயிரம் பேர் பாதிப்பு - அனர்த்த முகாமைத்துவ நிலை...