பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் – அனர்த்த முகாமைத்துவ நிலையம்!

Monday, August 28th, 2017

நாட்டின் ஏற்பட்டுள்ள வறட்சியால் 21 மாவட்டங்களில் 5 இலட்சத்து 22 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த 12 இலட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

இவர்களுக்கு நிவாரணம் அளிப்பதற்காக 1 தசம் 8 பில்லியன் ரூபா வழங்கப்பட்டுள்ளதாக மத்திய நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.  பல பிரதேசங்களில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகின்ற போதிலும் இந்தப் பிரச்சினையை நிவர்த்தி செய்வதற்காக அனர்த்த முகாமைத்துவ அமைச்சு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. தேசிய அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையங்களின் ஊடாக  பௌசர்கள் மூலம் நீர் விநியோகிக்கப்பட்டு வருகின்றது.

இந்த மாதத்திற்குள் மாத்திரம் சுமார் 200 ட்ரக்டர் பௌசர்கள் அமைச்சினால் பெற்றுக்கொடுக்கப்பட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டா 6 ஆயிரத்திற்கு மேற்பட்ட நீர்த்தாங்கிகள் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பகிர்ந்தளிக்கப்பட்;டன. அனர்த்த நிவாரணப் பணியாளர்கள் தொடர்ந்தும் பிரதேச மட்டங்களில் பணிபுரிந்து வருவதாகவும் மத்திய நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி  மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts:


கொரோனா அறிகுறிகளை ஏற்பட்டால் மறைக்காதீர்கள் - சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க கோரிக...
சுகாதார வழிமுறைகளை பின்பற்றி மாணவர்களை அழைத்து செல்லாத சாரதிகளுக்கு எதிராக சட்டநடவடிக்கை - பொலிஸ் ஊட...
நாடாளுமன்றத்தில் பைத்தியக்காரர்கள்போல் நடந்துகொள்ள வேண்டாம் - சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன வலிய...