பாடநூல் சபையை உருவாக்குமாறு கல்வியியலாளர்கள் வலியுறுத்து!

Friday, June 8th, 2018

தேசிய கல்வி ஆணைக்குழு 2016 ஆம் ஆண்டில் பாடநூல் சபை உருவாக்கப்பட வேண்டுமென கோரிக்கை விடுத்திருந்தும் இதுவரை அத்திட்டம் குறித்து கல்வியியலாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இத்திட்டம் முன்னெடுக்கப்படாது காணப்படுவதால் இலவசப் பாடப்புத்தகங்களில் தமிழ்ப் பதங்களுக்குப் பதிலாக சிங்கள மொழிச் சொற்கள் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டுகின்றனர்.

தேசிய கல்வி நிறுவகத்தில் பாடத்திட்டத்தை தயாரிப்போர் மாணவர்களுக்கு தேசிய கல்விக் கொள்கையை தமிழ் மாணவர்களுக்கு வழங்க வேண்டும் எனும் நோக்கில் அதீத அக்கறையுடன் இந்தப் பணியை செய்ய வேண்டும் எனவும் கூறுகின்றனர்.

குறிப்பாக தமிழ், வரலாறு, இந்து சமயம் உட்பட இன்னும் சில பாடங்களில் இப்பிரச்சினை தோன்றுவதை சுட்டிக்காட்டி கடந்த ஆண்டு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் விசேட குழுவினர் அமைச்சர் இராதாகிருணன் மற்றும் கல்வி அதிகாரிகளுடன் பேச்சுக்களை நடத்தியிரருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: