பாடசாலை வளாகத்திற்குள் இணைபாடவிதான செயற்பாடுகளுக்கு தடை – கல்வி அமைச்சின் செயலாளர் அறிவிப்பு!

பாடசாலை வளாகத்திற்குள் இடம்பெறும் கொண்டாட்டங்கள் மற்றும் இணை பாடவிதான செயற்பாடுகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன என்று கல்வி அமைச்சின் செயலாளர் ரஞ்சித் சந்திரசேகர தெரிவித்துள்ளார்.
அத்துடன் இந்த நடவடிக்கை நாட்டின் தற்போதைய சூழலைக் கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் இவ்வாறான நடவடிக்கைகளுக்கு இரண்டாவது பாடசாலை வாரத்தில் எந்த விதத்திலும் அனுமதி வழங்கக்கூடாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மூன்றாவது பாடசாலை வாரத்தில் விழாக்கள் மற்றும் இணை பாடவிதான செயற்பாடுகளுக்கு அனுமதியளிப்பது தொடர்பில் மீள் பரிசீலனை செய்யப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
கோண்டாவில் பகுதியில் முறுகல் நிலை: இருவர் கைது!
மது போதையில் வாகனம் செலுத்திய இளம் சட்டத்தரணி மீது பொலிஸார் வழக்கு!
இலங்கை மின்சார சபையை மீள் கட்டமைப்பு செய்ய அமைச்சரவை அனுமதி - அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவிப்பு!
|
|