பாடசாலை மாணவர்களை அடிப்பது சட்டப்படி குற்றம் – நீதிபதி இளஞ்செழியன்!
Thursday, July 28th, 2016
பாடசாலை மாணவர்களை அடிப்பது சட்டத்தின் பிரகாரம் குற்றமென குறிப்பிட்ட யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன், மாணவர்களை அடிப்பதை உடன் நிறுத்துமாறு அறிவுறுத்தியுள்ளார்.
யாழ்.மாவட்ட செயலகத்தில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற பாடசாலையின் அதிபர்களுடனான சந்திப்பின்போதே, அவர் இவ்விடயத்தைக் குறிப்பிட்டார்.
பாடசாலையில் பயிலும் மாணவர்களை தாக்குவது அல்லது வேலைத்தளங்களில் சிற்றூழியர்கள் மீது அதிகாரம் படைத்தவர்கள் தாக்குதல் நடத்தினால், அது சித்திரவதை குற்றமாகும் என்றும் அதற்கெதிராக மேல் நீதிமன்றில் 7 வருட சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்றும் நீதிபதி இளஞ்செழியன் மேலும் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்டவர் உச்ச நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுத் தாக்கல் செய்தால், தாக்குதல் நடத்தியவர்களின் வேலையும் பறிபோய் நட்டஈடும் செலுத்தவேண்டும் என குறிப்பிட்ட நீதிபதி, சம்பந்தப்பட்டவர் மீது சித்திரவதை குற்றத்தின் கீழ் வழக்குத் தாக்கல் செய்யுமாறு சட்டமா அதிபருக்கு நீதிமன்றம் ஆலோசனை வழங்குமென்றும் குறிப்பிட்டார்.
Related posts:
சாரதி அனுமதிப்பத்திரத்துக்கான மருத்துவச் சான்றிதழ் பெறுவதற்கு புதிய வசதி!
ஊரடங்கு இல்லாத பகுதிகளுக்கும் இறுக்கமடையும் நடைமுறைகள் – சுகாதார அமைச்சு அறிவிப்பு!
நட்டத்தில் இயங்கிய இ.போ.ச. கடந்த வருடம் 2,000 மில்லியன் இலாபம் ஈட்டியுள்ளது - இராஜாங்க அமைச்சர் தில...
|
|
|


