பாடசாலை மாணவர்களுக்கான பாடப்புத்தகங்கள் பற்றாக்குறை!

பாடசாலை மாணவர்களுக்கான 11 இலட்சம் பாடப்புத்தகங்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த நிலைமையானது பாடப்புத்தகங்களை அச்சிடும் அரச அச்சகம் மற்றும் தனியார் அச்சக உரிமையாளர்கள் உரிய காலத்தில் அச்சிடும் நடவடிக்கைகளை பூர்த்தி செய்யாமையாலும் இதனால் கடந்த தவணை நிறைவில் மாணவர்களுக்கு பாடப்புத்தகங்களை விநியோகிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் நிலுவையிலுள்ள புத்தகங்களை அடுத்த வாரத்திற்குள் மாணவர்களுக்கு விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பாடப்புத்தகங்களை அச்சிடும் நடவடிக்கையில் ஈடுபட்ட அச்சகங்களிடம் இருந்து தண்டப்பணம் அறவிடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது
Related posts:
வித்தியா படுகொலை வழக்கு விசாரணையில் மாற்றம்!
புதிய வரித் திருத்த யோசனையை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம்!
மின்சார மறுசீரமைப்பு திருத்தச் சட்டமூலம் தொடர்பான, வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு!
|
|