பாடசாலை மாணவர்களது “சீசன்” டிக்கட்டுக்கு நிவாரணம் – அடுத்த அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிப்பு!
Tuesday, September 10th, 2024
பாடசாலை மாணவர்களின் பருவகால சீட்டுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பான புதிய ஆலோசனைகளை உள்ளடக்கிய விசேட அமைச்சரவைப் பத்திரம், அடுத்த அமைச்சரவையில் சமர்ப்பிக்கவுள்ளதாக போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார்.
தற்போதைய நிவாரண உதவியில் மாற்றத்தை எவ்வாறு மேற்கொள்ள வேண்டும் என்பது தொடர்பாக புதிய அமைச்சரவை பத்திரம் அமைந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் சமர்ப்பிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கான பருவச் சீட்டு நிவாரணம் வழங்கும் முறைமையை மாற்றியமைப்பது தொடர்பாக, சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்துக்கமைய குழுவொன்றை நியமித்த நிதி அமைச்சு, அக்குழுவினூடாக பெற்றுக்கொண்ட பரிந்துரைகளை அமைச்சரவைக்கு சமர்ப்பித்துள்ளதாகதாகவும் அமைச்சர் பந்துல குணவர்தன குறிப்பிட்டார்.
மேலும், ஏனைய பிரேரணைகள் உட்பட புதிய அமைச்சரவைப் பத்திரம் ஒன்று அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்படும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
000
Related posts:
|
|
|


