பாடசாலை மாணவருக்கான பருவச் சீட்டு 26 ஆம் திகதிமுதல் வழங்கப்படும் – இலங்கை போக்குவரத்து சபை அறிவிப்பு!
Thursday, October 21st, 2021
200 க்கும் குறைந்த மாணவர்களைக் கொண்ட பாடசாலைகள் இன்று(21) மீள ஆரம்பிக்கப்பட்ட நிலை யில் எதிர்வரும் 26ஆம் திகதி முதல் பாடசாலை மாணவர்களுக்கான பருவச் சீட்டு வழங்கப்படும் என இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.
குறித்த பருவச் சீட்டுகளை எதிர்வரும் 26ஆம் திகதி முதல்29ஆம் திகதி வரையும் அடுத்த மாதம் 1ஆம் திகதிமுதல் 5ஆம் திகதி வரையும் இலங்கை போக்குவரத்து சபை டிப்போக்கள் மற்றும் பேருந்துதரிப்பு நிலைய அலுவலகங்களில் பெற்றுக்கொள்ளலாம் என இலங்கை போக்குவரத்து சபையின் உதவி பொது முகாமையாளர் ஏ.எச்.பண்டுக ஸ்வர்ணஹங்ஷ தெரிவித்துள்ளார்.
Related posts:
மாகாண சபைகளின் வாகனங்களை உடன் கையளிக்குமாறு வேண்டுகோள்!
உரும்பிராயில் வழிப்பறியில் ஈடுபட்டவர் பொதுமக்களால் மடக்கிப்பிடிப்பு!
2024ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் பல்வேறு சலுகைகளை வழங்குவதற்கான முன்மொழிவுகள் உள்ளடக்கம் – நித...
|
|
|


