பாடசாலை மாணவன் மீது கொலைவெறித் தாக்கதல் !

யாழ்ப்பாணம் தட்டாதெரு பகுதியில் பாடசாலை மாணவன் ஒருவர் மீது மேற்கொள்ளப்பட்ட வாள் வெட்டுச் சம்பவத்தில் குறித்த சிறுவன் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
குறித்த பகுதியில் உள்ள மரக்காலை ஒன்றில் நேற்றைய தினம் மாலை 5.30 மணியளவில் கே.கேமராஐன்( வயது17) என்ற மாணவன் நின்றிருந்த நிலையில், அந்த மாணவனை இலக்கு வைத்தே மேற்படி கொலைவெறித் தாக்குதலை மேற்கொண்டுள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சிறுவன் மரக் காலையில் நின்றவேளையில் அங்கு வந்த இளைஞர்கள் வாள், பொல்லுகள், கைக் கிளிப்புகள் சகிதம் வந்த சுமார் 15 பேர் கொண்ட குழு சிறுவனைத் தாக்கியதுடன் காலை உரிமையாளர் மீதும் தாக்கி வாகனங்களையும் அடித்து நொறுக்கினர்.
இவ்வாறு இவர்களின் தாக்குதலை அடுத்து இவர்கள் எழுப்பிய அவலக் குரலையடுத்து அயலவர்கள் திரண்டு தாக்குதலில் ஈடுபட்டவர்களை மடக்கி பிடிக்க முயன்ற நிலையில், மோட்டார் சைக்கிளையும் கைவிட்டுத் தப்பியோடியுள்ளனர்.
பாதிக்கப்பட்ட சிறுவன் யாழ் பொலிசில் முறையிட்டதையடுத்து யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Related posts:
|
|