பாடசாலை மட்ட மதிப்பீட்டுக்கு மாற்று வழி- ஆசிரியர்கள்!

Friday, February 24th, 2017

ஆசிரியர்கள் மேற்கொண்டுவரும் பாடசாலை மட்ட மதிப்பீட்டு நடவடிக்கைகளுக்குப் பதிலாக மாற்று வழிமுறையொன்றை அறிமுகம் செய்வதற்கு கல்வி அமைச்சு முன்னெடுத்துள்ள தீர்மானத்துக்கு இலங்கை ஆசிரியர் சங்கம் தனது பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளது.

இவ்வருடம் முதல் செயற்படுத்தப்படும் விதத்தில் மாற்றுத்திட்டமொன்றை முன்வைக்கவுள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். பாடசாலை ஆசிரியர்களுக்கு தமது மாணவர்களுடன் கூடிய நேரத்தை செலவிடுவதே இந்த நடவடிக்கையின் நோக்கமாகும் எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.

பழைய முறைமையினால் ஆசிரியர்கள் ஆவணங்களை நிரப்பும்பணியில் அதிக நேரத்தை செலவிட வேண்டியிருந்தனர். இந்த முறைமையை நீக்குவதற்கு கல்வி அமைச்சு எடுத்துள்ள தீர்மானத்தை நாட்டிலுள்ள 2 லட்சத்து 37 ஆயிரம் ஆசிரியர்களும் பாராட்டியுள்ளதாகவும் இலங்கை ஆசிரியர்சங்கத்தின் செயலாளர் ஜோசப்ஸ்டாலின் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதே வேளை, மாற்றுத்திட்டத்தை கல்வி அமைச்சு விரைவில் அறிமுகம் செய்ய வேண்டும் எனவும் ஜோசப் ஸ்டாலின் கல்வி அமைச்சிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

slta

Related posts: