பாடசாலை சீருடை: அரசாங்கத்தின் முக்கிய தீர்மானம்!
Monday, November 5th, 2018
பாடசாலை மாணவர்களுக்கு சீருடை வழங்கும் நடைமுறையில் மீளவும் மாற்றம் செய்யப்பட உள்ளதாக தெரியவருகிறது.
பாடசாலை மாணவ மாணவியருக்கான இலவச சீருடை வழங்கும் வகையில் கல்வி அமைச்சு சீருடைக்கான வவுச்சர்களை வழங்கி வந்தது. எனினும், பிரதமர் மஹிந்த ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம் இந்த வவுச்சர் முறையை ரத்து செய்ய தீர்மானித்துள்ளது.
பழைய முறையில் நேரடியாக மாணவ மாணவியருக்கு சீருடைகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என நிதி மற்றும் பொருளாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி, எதிர்வரும் 2019ம் ஆண்டு ஜனவரி மாதம் பாடசாலை மாணவ மாணவியருக்கு சீருடைகள் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Related posts:
நாடு எதிர்கொள்ளும் பொருளாதார சுமை பொதுமக்கள் மீது திணிக்கப்படாது - அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவிப்ப...
சுற்றுலா பயணிகளின் வருகையில் அதிகரிப்பு - இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவிப்பு!
சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று அடுத்த வாரம் இலங்கை வருகை தரும் - நீதி அமைச்சர் விஜ...
|
|
|


