பாடசாலை கல்வியை முடித்த மாணவர்களுக்கு உயர்தர கற்கை நெறி – கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் தெரிவிப்பு!

புதிய மறுசீரமைப்பின் ஊடாக எட்டு மாதங்களுக்குப் முன்னர் பாடசாலை கல்வியை முடித்துக் கொண்ட மாணவர்களுக்கு உயர்தரக் கற்கை நெறிகளுக்கான வசதிகள் செய்து கொடுக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில் –
கல்வி மறுசீரமைப்பு தொடர்பாக தற்கோது கலந்தாலோசிக்கப்படுகின்றது. பல்வேறு நாடுகளில் 21 வயதை அடையும் போது, பிள்ளைகள் பட்டப்படிப்பை முடித்துக் கொள்கின்றார்கள். அதேபோன்று இலங்கை மாணவர்களுக்கும் இவ்வாறான வசதிகள் பெற்றுக் கொடுக்கப்படவுள்ளன. பத்தாம், 11 ஆம் வகுப்பிற்காக இதுவரை இருந்த காலவரையறை ஒன்றரை வருடமாக குறைக்கப்படவுள்ளது. இறுதி இரண்டு வருடங்களுக்குள் இதன் பலன்களை மாணவர்களுக்கு வழங்குவது நோக்கமாகும் என்றும் கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு புதிய பாடசாலை சீருடைகள்!
ஒரு இலட்சம் காணி அலகுகள் வழங்கும் வேலைத்திட்டம் - முதற்கட்டத்தில் 20 ஆயிரம் இளம் முயற்சியாளர்களுக்கு...
சுதந்திர தினத்தை முன்னிட்டு 619 கைதிகளுக்கு விடுதலை!
|
|