பாடசாலை ஆசிரியர்களுக்கும் TAB வழங்கப்படும்!
Thursday, November 10th, 2016
தெரிவு செய்யப்பட்ட 175,000 மாணவர்களுக்கு ஸ்மார்ட் கிளாஸ் எனப்படும் உயர்தரமான வகுப்பறை வசதிகளை வழங்குவதற்காக புதிய பாதீட்டில் 6,500 மில்லியன் நிதி ஒதுக்குவதாக நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும் 28,000 ஆசிரியர்களுக்கு டெப் (TAB) வழங்குவதாகவும், இதற்காக 5,000 மில்லியன் ரூபா நிதி ஒதுக்குவதாகவும் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். இதற்காக வைபை வழங்குவதற்கு தொலைத் தொடர்பாடல் நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கின்றேன் என்றும் அவர் கூறினார்.
அத்துடன் வருட இறுதிக்குள் நாட்டில் உள்ள 1000 பாடசாலைகளின் மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளுக்காக 3000 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் பாடசாலைகளில் கல்வி வகுப்பறைகள் மற்றும் கட்டிடங்களை நிர்மானிப்பதற்க்கான 21,000 மில்லியன் ரூபா ஒதுக்குவதாகவும் கூறினார்

Related posts:
உலக சந்தையில் எரிபொருள் விலை குறையும் போது பலாபலனை மக்களுக்கு வழங்குவோம் - நிதியமைச்சர்!
பல்கலைக்கழங்கள் மீளத் திறக்கும் திகதி தொடர்பில் நாளை தெரியவரும் - பல்கலைக்கழகங்கள் மானியங்கள் ஆணைக்...
சர்வதேச நாணயநிதியத்தின் திட்டத்தினை முன்னெடுக்கமுடியாத நிலையேற்பட்டால் பெரும் பொருளாதார ஆபத்து ஏற்பட...
|
|
|


