பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் 60 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் சேவைக்கு – அமைச்சர் ரோஹித்த அபேகுணவர்தன அறிவிப்பு!

எதிர்வரும் 21 ஆம் திகதி பாடசாலைகள் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில், அரசாங்கத்தினால் நியமனம் வழங்கப்பட்ட 60 ஆயிரம் பட்டதாரிகள், ஆசிரியர் சேவையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக அமைச்சர் ரோஹித்த அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.
களுத்துறையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கத்தினால் தீர்மானிக்கப்பட்டவாறு பாடசாலைகளின் கற்றல் செயற்பாடுகள் எதிர்வரும் 21 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும்.
மாணவர்களின் நலனைக் கருத்திற்கொண்டு அரசாங்கத்தினால் நியமனம் வழங்கப்பட்டுள்ள பட்டதாரிகள், ஆசிரியர் சேவைக்குள் உள்வாங்கப்பட்டு கல்வி செயற்பாடுகள் மீள ஆரம்பிக்கப்படும்.
அதேநேரம், ஒரு சிலர் குறுகிய அரசியல் நோக்கத்திற்காகவே, தொழிற்சங்க நடவடிக்கையினை முன்னெடுத்து வருவதாக அமைச்சர் ரோஹித்த அபேகுணவர்தன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
நாட்டுக்கு அபகீர்த்தி ஏற்படுத்தியவர் பணி நீக்கம் - ஜனாதிபதி
பொலித்தீன் இன்னும் 6 மாதங்களுக்கு கையிருப்பில் இருக்கும் - பொலித்தீன் உற்பத்தியாளர் சங்கம்!
காலையிலேயே சென்று வாக்களியுங்கள் யாழ் கிளிநொச்சி தேர்தல் மாவட்ட மக்களிடம் அரச அதிபர் மகேசன் வேண்டுக...
|
|