பாடசாலைகளை மீண்டும் திறப்பதற்கான வழிகாட்டல்கள் சில வாரங்களில் வெளியாகும் – கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன அறிவிப்பு!

Sunday, September 19th, 2021

பாடசாலைகளை மீண்டும் திறப்பதற்கான சுகாதார வழிகாட்டல்கள் கல்வி மற்றும் சுகாதார அதிகாரிகளினால் அடுத்த சில வாரங்களில் வெளியிடப்படுமென கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

அத்துடன் பாடசாலைகளை மீண்டும் திறப்பதில் உள்ள சிக்கல்கள் குறித்து கல்வி மற்றும் சுகாதார அமைச்சக அதிகாரிகள் தொடர்ந்தும் கலந்துரையாடி வருகின்றனர். அ தநேரம் பாடசாலைகளை மீள ஆரம்பிப்பதற்கான ஒரு இறுதியிடப்பட்ட திகதியை இன்னும் தீர்மானிக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்சமயம் பாடசாலை ஆசிரியர்களுக்கான தடுப்பூசி செயல்முறை முடிவடையும் நிலையில், நாடு முழுவதும் 2 இலட்சத்து 40 ஆயிரம் ஆசிரியர்களுக்கு தடுப்பூசி போடும் செயல் திட்டத்தை சுகாதார அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

அத்துடன் தரம் ஐந்து புலமைப்பரிசில், உயர்தர, சாதாரணதர பரீட்சைகளை நடத்துவதற்கு தேவையான திட்டங்களையும் கல்வி அமைச்சு பரிசீலித்து வருகின்றது.

இதேவேளை பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசி போடும் செயற்திட்டத்தை துரிதப்படுத்துவதற்கும் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தினேஷ் குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே பல்கலைக்கழகங்களையும் விரைவில் திறக்க  பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதுமான ஊரடங்கு ஒக்டோபர் 1 ஆம் திகதி முடிவுக்கு வருமானால் கட்டம் கட்டமாக அனைத்து செயற்பாடுகளும் வழமைக்கு திரும்புமெனவும் எதிர்பார்பதாக அவர் மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: