பாடகர்களுக்கு ஓய்வூதியம்!
Friday, September 8th, 2017
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், 65 வயதுக்கும் மேற்பட்ட சிரேஷ்ட பாடகர், பாடகிகளுக்கு ஓய்வூதியம் வழங்கும் நிகழ்வு ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்த நிகழ்வு, ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றுள்ளது.இதனை இலங்கை பாடகர், பாடகிகள் சங்கம் ஒழுங்கு செய்திருந்ததுடன், குறித்த நிகழ்வில் 40 பாடகர், பாடகிகளுக்கு காசோலைகளையும் சான்றிதழ்களையும் ஜனாதிபதி வழங்கியுள்ளார்.
ஜனாதிபதியின் வழிக்காட்டலின் பேரில் கலைஞர்களுக்கு பல நலன்புரி வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.இதேவேளை, பாடகர், பாடகிகளின் பாதுகாப்பு நிதியத்திற்கு ஜனாதிபதி அண்மையில், 250 லட்சம் ரூபா வழங்கியதாகவும் ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
Related posts:
நாடாளுமன்ற ஆயுட்காலத்தை நீடிப்பதற்கான யோசனை முன்வைக்கவில்ல - பிரதமர்!
சமூக மட்டத்தில் அடையாளம் காணப்படும் கொரோனா நோயாளர்கள் - அரசாங்க மருத்துவர்கள் விடுத்துள்ள அபாய எச்சர...
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவேன் - ஜூன் மாத இறுதியில் இறுதித் தீர்மானத்தை அறிவிப்பதாக ஜனாதிபதி ரணில...
|
|
|


