பாகிஸ்தானில் சார்க் மாநாடு நடத்துவதற்கான சூழல் இல்லை – அமைச்சர் மங்கள சமரவீர!

Friday, September 30th, 2016

பாகிஸ்தானில் சார்க் மாநாட்டை நடத்துவதற்கான சூழல் இல்லை என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

பாதுகாப்புக் காரணங்களால் பாகிஸ்தானின் இஸ்லாமபாத்தில் நடைபெறவிருந்த சார்க் மாநாடு கேள்விக்குறியாகியுள்ளது.இந்தியா இம்மாநாட்டை முன்னரே புறக்கணித்திருந்தது. அதனைத் தொடர்ந்து, பங்களாதேஷ், பூட்டான், ஆப்கானிஸ்தான், நேபாளம் ஆகிய நாடுகளும் புறக்கணித்தன.

இஸ்லாமபாத்தில் நவம்பர் 9 மற்றும் 10 ஆம் திகதிகளில் சார்க் மாநாடு நடைபெறவிருந்த நிலையில், பெரும்பாலான உறுப்பு நாடுகள் பங்குபற்ற மறுத்ததைத் தொடர்ந்து, இம்முறை சார்க் மாநாடு பாகிஸ்தானில் நடைபெறும் சாத்தியம் குறைவடைந்துள்ளது.

24-1440410994-mangala-samaraweera234-600

Related posts: