பழைய முரண்பாடுகளை மறந்து பொது வேலைத்திட்டத்தில் இணையுங்கள் – அனைவருக்கும் அழைப்பு விடுக்கிறார் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க!
 Friday, October 7th, 2022
        
                    Friday, October 7th, 2022
            
அண்மைக்கால வரலாற்றில் நாடு எதிர்நோக்கியுள்ள பாரிய பொருளாதார நெருக்கடிக்கு தீர்வை பெற்றுக் கொள்ளும் வகையில் பழைய முரண்பாடுகளை மறந்து பொது வேலைத்திட்டத்தில் அனைவரையும் இணையுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அனைத்து தரப்பினருக்கும் மீண்டும் அழைப்பு விடுத்துள்ளார்.
நாடாளுமன்றில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் நெருக்கடியிலிருந்து மீள்வதற்கான நான்கு கட்ட மூலோபாயத் திட்த்தை அறிமுகப்படுத்திய ஜனாதிபதி, முதல் கட்டம் வெற்றியடைந்துள்ளதாகவும், இரண்டாவது கட்டத்துக்கான அடித்தளம் உருவாக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்
இதனிடையே
இலங்கையின் நிலைப்பாடு குறித்து இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு விளக்கமளிக்க புதுடில்லிக்கு விஜயம் செய்ய எண்ணியுள்ளதாக இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.
எனினும் அவர் எப்போது இந்தியாவுக்கு செல்வார் என்பதை அவர் இன்று தமது நாடாளுமன்ற சிறப்பு அறிக்கையில் குறிப்பிடவில்லை. இது குறித்து ஜப்பானில் தாம் மோடியுடன் கலந்துரையாடியதாகவும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் உரையாற்றிய இந்திய பிரதிநிதி, இலங்கைக்கு 2019 ஆம் ஆண்டில் இருந்து இந்தியா உதவியளித்து வருவதாக குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் அண்டை நாடு என்ற அடிப்படையில் இலங்கைக்கான உதவி தொடரும் என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது..
Related posts:
|  | 
 | 
 
            
        


 
         
         
         
        